சாலை விபத்தில் டுகாயமடைந்தவர்களை திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      கோவை
60a

             திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தெக்கலூர் கிராமம், கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் - வடுகபாளையம் புதூரில் இன்று (19.01.2017) அதிகாலை 1.15 மணியளவில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் மீது தனியார் சொகுசுப் பேருந்து பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது.

           மேலும், தனியார் பேருந்தில் ளுநளெழச பழுது ஏற்பட்டதன்  காரணமாக விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக பேருந்து கட்டுப்பாட்டினை இழந்து பாலத்தின் பக்க சுவரின் மீது மோதியதில் பேருந்து அதிகம் சேதமடைந்துள்ளது. புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் 44 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 35 பேர் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 9 பேர் திருப்பூர் தாராபுரம் சாலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை மாவட்ட கலெக்டர்  இன்று (19.01.2017 ) நேரில் சென்று உடல் நலம் விசாரித்து இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

                 இந்நிகழ்வின்போது, பொதுமருத்துவம்  மற்றும் நோய்தடுப்புத்துறை இணை இயக்குநர் மரு.விஜயகுமார் , மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் மரு.கேசவன், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: