கோவையில் ஜல்லிகட்டு, ரேக்ளாபந்தயம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      கோவை
JAN -22a RACKLA RACE (1)

கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில், இன்று (22.01.2017)  தமிழ்நாடு முதமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு அரசு நடத்தும் ரேக்ளா பந்தயத்தம் துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப  தலைமையில்  தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்  முன்னிலையில்,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  ரேக்ளா பந்தயத்தினை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

          தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆணைப்படி, ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில்  அம்மாவின் அரசின், சீறிய தொடர்முயற்சியால்  தமிழ்நாடு முதலமைச்சர்  பாரதப்பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் பாரம்பரியத்தினை காத்திடும் விதமாக தமிழர்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் விதமாக மத்திய அரசை வலியுறுத்தி தமிழர்களின் பண்பாடு காக்கப்படும் வகையில் ஜல்லிக்கட்டுக்கான தடைகள் அகற்றிட அவசர சட்டம் பிறப்பித்ததையடுத்து இன்று தமிழகத்தில் அனைத்துப்பகுதிகளிலும், ஜல்லிக்கட்டு நடைபெறுவதுடன் தமிழக அரசு நடத்தும் ரேக்ளா பந்தயமும் நடைபெறுகிறது. அதையொட்டி கோயம்புத்தூரில் இன்று ரேக்ளா பந்தயம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெற்றிக்கு காரணமே இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர் அறவழிப்போராட்டமேயாகும். அதற்காக மாண்புமிக தமிழ்நாடு முதலமைச்சர்  முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள், மேலும், எல்லோரும் முழு ஒத்துழைப்பு அளித்து இவ்வெற்றியை பகிர்ந்து கொள்ளுமாறு தெரிவித்ததுடன் ஒவ்வொறு ஆண்டும் இதே போல் நடைபெற தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தார்.

          பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற ரேக்ளாபந்தய வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50,000மும், மூன்றாம் பரிசாக ரூ.25,000மும் வழங்கப்பட்டது.

                இந்நிகழ்ச்சியில், மாநர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ்  மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ஜுனன், ஒ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் து.வெங்கடேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, ஆவின் ஒன்றியத்தலைவர் ப.வே.தாமோதரன், மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன் , தமிழ்நாடு ரேக்ளா கிளப் செயலர் திருமுகம், கோவை மாவட்ட ரேக்ளா கிளப் செயலர் அர்ச்சுணன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: