தூத்துக்குடிக்கு வந்த ஹோவர் கிராப்ட் ரோந்து படகு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

தூத்துக்குடிக்கு வந்த ஹோவர் கிராப்ட் ரோந்து படகை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இந்திய குடியரசு தினம் வருகிற 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பயங்கரவாதிகள் ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரைக்கு, மண்டபம் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘ஹோவர் கிராப்ட்‘ ரோந்து படகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தது. இந்த ரோந்து படகு 20 மீட்டர் நீளமும், 30 டன் எடையும் கொண்டது. இது மணிக்கு 45 கடல்மைல் வேகத்தில் சல்லக்கூடியது.இந்த ரோந்து படகை பார்வையிட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று மாணவர்கள் அந்த ரோந்து படகை பார்வையிட்டனர். அவர்களுக்கு அங்கு இருந்த கப்பல்படை அதிகாரிகள், அந்த ரோந்து படகின் செயல்பாடுகள் பற்றியும், படகில் உள்ள நவீன கருவிகள் பற்றியும் விளக்கி கூறினார்கள். இதில் தூத்துக்குடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு, ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: