முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழா மார்ச் மாதம் நடைபெறவுள்ளது: படகில் செல்ல விண்ணப்பங்கள் விநியோகம் துவக்கம்.

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- இரு நாட்டு பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு திருவிழா வரும் மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளதால் திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள செல்லும் பக்தர்கள் படகில் செல்வதற்கான விண்ணப்பங்கள் ராமேசுவரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் வழங்கப்படுவதாக அதன் பங்குத்தந்தை சகயாராஜ் திங்கள் கிழமை தெரிவித்தார். . ராமேசுவரம் கடல் பகுதியிலிருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள கச்சத்தீவில் தூய அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் இந்தியா-இலங்கை பகுதியை சேர்ந்து பக்தர்கள் இணைந்து திருவிழா கொண்டாடுவது வழக்கமாகும்.

 இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் மார்ச் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, திருப்பலி பூஜைகளுடன் சிறப்பு பூஜைகளுடன் 12 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் தூய சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை சகாயராஜ்ஜூக்கு இலங்கை யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் சார்பில் முறைப்படி அழைப்புகள் வந்துள்ளது. இதைனையொட்டி திருவிழாவில் இந்தியப் பகுதியிலிருந்து கலந்த கொள்ளும் பக்தர்களை அழைத்து செல்லும் நடவடிக்கையில் பங்குத்தந்தை தலைமையில் கச்சத்தீவு திருவிழா கமிட்டியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதனையொட்டி திருவிழாவிற்கு பக்தர்களை அழைத்து செல்லும் படகு உரிமையாளர்கள் ராமேசுவரம் வேர்க்கோடு தூய சூசையப்பர் ஆலயத்திலுள்ள கச்சத்தீவு திருவிழா அலுவலகத்தில் படகிற்கான விண்ணப்பங்களையும், பக்தர்களுக்கான விண்ணப்பங்களை இன்று செவ்வாய்க்கிழமை முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணத்துடன் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர் அலுவலகத்தில் கொடுக்கப்படவேண்டும் எனவும், திருவிழாவிற்கு பக்தர்கள் செல்லும் படகு ராமேசுவரம் துறைமுகப் பகுதியிலிருந்து மார்ச் 11 ஆம் தேதி அதிகாலையில் புறப்படும் எனவும்,திருவிழா அன்று மாலை 5.30 மணிக்கு கொடியற்றத்துடன் துவங்கப்பட்டு தொடர்ந்து திருப்பலி பூஜைகளும்,சிறைப்பு பூஜைகளும்,தேர்பவனியும் நடைபெறும். மற்றும் மறுநாள் காலையில் திருப்பலி பூஜைகளுடன் கொடியுறக்கம் நடைபெறும் என ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சகாயராஜ் திங்கள் கிழமை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago