கார்கில்நகர் நிர்வாகிகள் தேர்வு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      சென்னை

சென்னை மாநகராட்சி பகுதியில் அடங்கிய திருவொற்றியூர் 7வது வட்டம் கார்கில்வெற்றிநகரில் வசிக்கும் பொதுமக்களுக்காக குடியிருப்போர் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் அதற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நிர்வாகிகள் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிமுக கூட்டம் திருவொற்றியூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பி.ஆதிகுருசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக எம்.சுந்தரமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கார்கில்வெற்றிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் செய்திருந்தது.

புதிய தலைவராக எம்.அமிர்தராஜ், செயலாளராக எம்.ஞானவேல், பொருளாளராக எல்.மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணைத்தலைவர்களாக எஸ்.ஐயாதுரை, எஸ்.என்.அசன்த், பி.என்.மாரிமுத்து, மற்றும் துணைசெயலாளர்களாக எம்.டானியேல், எம்.முருகன், பி.சாமுவேல்குருபாதம் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: