ஈரோட்டில் மனிநேய வாரவிழா துவக்கம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ஈரோடு

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஈரோடு  மாவட்டத்தில் (24ம்தேதி) முதல் 30ம்தேதி வரை 7 நாட்களுக்கு மனிதநேய  வாரவிழா கொண்டாடப்படவுள்ளது. ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில்   தொடக்கவிழா நடைபெறவுள்ளது. 25ம்தேதி மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர்  நலப்பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளின் கலை  இலக்கிய போட்டிகள்கோபியில் உள்ள ராமன் சரோஜினிதேவி விடுதியிலும், 26ம்தேதி  சித்தோடு ஸ்ரீவாசி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகளின் மனமகிழ்  நிகழ்ச்சி பவானி நந்தனார் தெருவில் உள்ள ஆதிதிராவிடர் காலனியிலும்  நடைபெறவுள்ளது. நல்லிணக்க நிகழ்ச்சி

27ம்தேதி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை  மூலமாக ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நல்லிணக்க நிகழ்ச்சியும்,  28ம்தேதி ஈரோடு மாவட்ட மக்கள் கலை மன்றம் மூலமாக குமலன்குட்டை அரசு  உயர்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகளும், 29ம்தேதி மாவட்ட தொழில்மையம்  மூலமாக சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனை கூட்டமும், 30ம்தேதி ஈரோடு  செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு விழாவும்  நடைபெறவுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்: