எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் செங்குந்தர் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் மைலார் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூரில் செங்குந்தர் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மைலார் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மைலார் திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னதாக மைலார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு நல்லத் தண்ணீர் குளக்கரையிலிருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக வானவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க வீதியுலா வந்தது. அப்போது விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி சுவாமிக்கு தங்களது நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். பின்னர் பாவோடை தோப்பு தெருவில் உள்ள மைதானத்தில் சுவாமி வந்தடைந்த பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மைதானத்தில் இளைஞர்களுக்கு உறியடி போட்டியும், மகளிருக்கு கோலப்போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்த
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இளைஞர்களுடன் விழா குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்கு உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


