குடியரசு தின விழா ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      ஈரோடு

குடியரசு தினம் வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அசபாவிதம் நடைபெறாமல் இருக்க ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.குடியரசு தினம் வரும் 26-ந் தேதி (வியாழக் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அசபாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். ரெயில்வே இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமையில் ரெயில்வே போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் ரெயிலில் வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: