முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய குழு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் ,முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு கோவிலூர், உப்பூர், திருத்துறைபூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாமணி ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய குழுவின் தலைவரும், தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனருமான வசுதா மிஸ்ரா தலைமையில் நிதித்துறை ஆலோசகர் தீனா நாத், எரிசக்தித்துறை துணை இயக்குனர் சுமித் குமார் ஆகியோர் அடங்கிய குழு தமிழக அரசின் முதன்மை செயலரும் , வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் கே.சத்யகோபால் மற்றும் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

விவசாய கூலி

 

கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடுகோவிலூர் உப்பூர், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாமனி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று வறட்சியால் பாதிக்கப்ட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகள் , விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். முத்துப்பேட்டையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்த புகைப்படங்கள், குறும்படத்தையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

இவ்வாய்வின் போது நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே. கோபால், மாவட்ட வருவாய் அலுவலர் ட்டி. மோகன்ராஜ், வேளாண்மை இணை இயக்குநர், க. மயில்வாகனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரவிசந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமீனாட்சி, செல்வசுரபி, வேளாண்மை உதவி இயக்குநர்கள், வட்டாட்சியர்கள், வேளாண்மை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையை சேர்ந்த அனைத்து களஅலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்