முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமப்புற உணவு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      சென்னை

கிராமப்புற உணவு தொழில் முனைவோருக்கு உணவு பாதுகாப்பு, உணவு தரம் குறித்து கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் ஐநாட்டிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு முகாமிற்கு தேசிய வேளாண் நிறுவன அறங்காவலர் எஸ்.சாமிநாதன் தலைமை தாங்கினார். தேசிய வேளாண் நிறுவன கூடுதல் இயக்குனர் ஆர்.கல்பனா வரவேற்றார். தேசிய வேளாண் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலாஜி, பரணிதரன், சீனுதுரை, மரியா மார்க்கரெட்,சமூக சேவகர் என்.டி.மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

 

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஐநாட்டிக்ஸ் நிறுவன இயக்குனர் வித்யா துரை கலந்துக் கொண்டு உணவு தொழில் செய்வோர் தொழிலில் கடைப்படிக்க வேண்டிய தரத்தையும், பாதுகாப்பையும் குறித்து பேசினார்.

 

தொடர்ந்து உணவு தொழில் முனைவோருக்கான உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து தேசிய வேளாண் நிறுவன உணவு பகுப்பாய்வக தலைவர் ஜெ.சாய்பாபா சிறப்புரையாற்றினார்.

 

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் குழுவினர் அவர்களின் உணவு தொழில் பொருட்களை கண்காட்சியில் வைத்தனர். இந்த கண்காட்சியை பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள் அவர்களுக்கு பணி ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து கிராமப்புற உணவு தொழில் முனைவோருக்கு உணவு தொழில் முனைவோருக்கான கையேடு வழங்கப்பட்டது.

 

முடிவில் உணவு தொழில் முனைவோரின் தொழில் முன்னேற்றம், வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு கூட்டத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்ட முடிவில் தேசிய வேளாண் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்