முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: நீதியரசர் நாகமுத்து திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி,

தென்காசியில் அமைக்கப்பட்ட கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தினை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து திறந்து வைத்தார்.

 நெல்லை மாவட்டம் தென்காசியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்), கூடுதல் சார்பு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தென்காசி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் ய+னியன் அலுவலக வளாக சமுதாய நலக்கூடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து புதிய நீதிமன்ற அறையை திறந்து வைத்து பேசினார்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். முதன்மை மாவட்ட நீதிபதி ராஜசேகர் வரவேற்றுப் பேசினார்.  தென்காசி மூத்த வக்கீல்கள் பி.எஸ்.பாண்டியன், வெங்கட்ரமணா, கனகசபாபதி, முருகேசன், தாஹீராபேகம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ராஜமாணிக்கம் நன்றி  கூறினார். தென்காசி பார் அசோசியேசன் தலைவர் செல்லத்துரை, செயலாளர் மாரியப்பன், தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவர் பாண்டியராஜ், செயலாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்