வாழைத்தோட்டத்தில் மனிதநேய வாரவிழா

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      நீலகிரி

வாழைத்தோட்டத்தில் மனித நேய வார விழா நடைபெற்றது.

                              ஜி.டி.ஆர்.பள்ளி

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மசினகுடி அருகேயுள்ள வாழைத்தோட்டத்தில் அமைந்துள்ள ஜி.டி.ஆர் உண்டு உறைவிட பள்ளியில் மனிதநேய வாரவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஊட்டி ஊரக துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பொன் ராமர் முன்னிலை வகித்தார்.

                            அறிவுத்திறன் போட்டி

இவ்விழாவில் மதநல்லிணக்கம், வன்கொடுமை சட்டம், மனித நேயம் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் உதவி ஆய்வாளர்கள் சிவாஜி, ரவிகுமார், தலைமை காவலர் தனகோடி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: