முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலர் தீவனம் விநியோகம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      நீலகிரி

உலர் தீவனம் விநியோகம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                                  ஒப்பந்தப்புள்ளி

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வறட்சி நிவாரண திட்டம் 2016_2017ன் கீழ் நான்கு உலர்தீவன கிடங்குகள் அமைத்து உலர் தீவனம் விநியோகம் செய்யும் பொருட்டு, உலர் தீவனம் கொள்முதல் செய்ய மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளி தனியார் நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

                              4_ந் தேதி

ஒப்பந்ததாரர்கள் ஊட்டியிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் விண்ணப்பங்களை வரும் 1_ந் தேதி வரையிலான வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 04.02.2017 மாலை 5 மணி வரை பெறப்படும். மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி வரும் 4_ந் தேதி மாலை 5.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் திறக்கப்படும். அஞ்சல் வழியாக அனுப்பப்படும் ஒப்பந்த புள்ளிகள் பெறுவதில் தாமதம் ஏற்படின் அதற்கு கால்நடை பராமரிப்புத்துறை பொறுப்பல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்