முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித நேய வாரவிழா கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில்,  மனித நேய வாரவிழா (ஜனவரி 24 முதல் ஜனவரி 30 வரை) நிறைவு நாள் நிகழ்ச்சி, நாகர்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.நிகழ்ச்சியில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தெரிவித்ததாவது:-

தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக, பல்வேறு திட்டங்களை அறிவித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக உயர வழிவகை செய்துள்ளது. குறிப்பாக, இலவச பாடநூல், குறிப்பேடுகள், சீருடைகள், மிதிவண்டிகள் போன்ற திட்டங்களின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, மேலும், மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெற உதவித்தொகைகள் வழங்கி வருகிறது. வீடற்ற ஏழை ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.  எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாணவ, மாணவியர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களை முழுவதுமாக பெற்று, பயன்பெற வேண்டும்.  தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு பெறவேண்டும் என்று சந்தேகங்கள் இருந்தால், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு, தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என தெரிவித்தார்.பின்னர், மனித நேய வாரவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் நடனப்போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும், நினைவுப்பரிசுகளும்,  கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 2 மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருந்த 3 நபர்கள்  இயற்கை மரணமடைந்தார்கள்.  அன்னாரது குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு நிதியுதவியாக தலா ரூ.17 ஆயிரத்திற்கான காசோலைகளையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர்  இரா. சிவதாஸ்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் உதவி கணக்கு அலுவலர்                   சா. செல்வகுமார், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்                      ந.கணேசன் (வாழையத்துவயல்),  சி.சங்கர குமார் (உடையடி), தனி வட்டாட்சியர்                      (ஆதி திராவிடர்)   எம். ரத்தினம் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்