முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி-காங். கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் புதிய கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மும்முனை போட்டி
உத்தரபிரதேசத்தில் வருகிற 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா ஒரு சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

பா.ஜ எதிர்பார்ப்பு
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. எனவே சட்டசபை தேர்தலிலும் இந்த கட்சியே வெற்றிபெறும் என்று பரவலாக கூறப்பட்டது. சமீபத்தில் இது சம்மந்தமாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்தன. அதிலும் பாரதிய ஜனதா கட்சியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

முந்தைய கருத்துகணிப்பு
கடந்த வாரம் தி வீக் பத்திரிக்கை ஹன்சா நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டது. அதில் பாரதிய ஜனதா 192-ல் இருந்து 196 இடங்களை பிடிக்கும் என்றும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் இருந்து 182 இடங்களை பிடிக்கும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி 20-ல் இருந்து 24 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

காங். - சமாஜ்வாடி முன்னிலை
இப்போது சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி.எஸ்.-லோக் நிதி நிறுவனத்துடன் சேர்ந்து ஏ.பி.பி. நியூஸ் செய்தி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. அதில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் 187 இடங்களில் இருந்து 191 இடங்கள் வரையும், பாரதிய ஜனதா 118-ல் இருந்து 128 இடங்களையும், பகுஜன் சமாஜ் 76-லிருந்து 86 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அகிலேஷ்க்கு ஆதரவு
அதாவது ஒட்டுமொத்த கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 35 சதவீத ஓட்டுக்களையும், பாரதிய ஜனதா 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 23 சதவீத ஓட்டுக்களையும் பெறும் என்று கூறியுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 26 சதவீத ஓட்டுக்களையும் பெற்றிருந்தன. சிறந்த முதல்வராக யார் இருப்பார் என்று எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் 26 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 21 சதவீதம் பேர் மாயாவதிக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு செல்வாக்கு
பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேசத்தில் அதிக செல்வாக்கு இருப்பதும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 70 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறினார்கள். ஆனாலும் பாரதிய ஜனதாவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் மக்களின் ஆதரவு குறைவாக உள்ளது. சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள மோதலால் கட்சிக்கு பாதகம் ஏற்படுமா? என்று எடுக்கப்பட்ட கணிப்பில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்தது. அந்த கட்சியில் உள்ள பிரச்சினைக்கு முலாயம்சிங் யாதவின் தம்பி சிவபால்யாதவ் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago