முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவையாறு வட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணி : கலெக்டர் அண்ணாதுரை நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் பருவ மழை பொய்த்ததாலும், பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களில் வறட்சி கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (31.01.2017) நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

 

பருவமழை பொய்ப்பு

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், காவேரியில் போதிய அளவு தண்ணீர் வராததாலும் சம்பா தாளடி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதன்மைச் செயலர் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களது அறிவுரைக்கிணங்க, கிராமம் வாரியாக ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் விவசாயிகளின் விபரம் குறித்த அறிக்கையினை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் தயாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 906 வருவாய் கிராமங்கள் உள்ளது. அதில் 853 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவையாறு வட்டாரத்தில் மேலதிருப்பந்துருத்தி முதன்மை, நடுக்காவேரி கிழக்கு, நடுக்காவேரி மேற்கு, கருப்பூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.

 

கணக்கெடுப்பு

 

 

களப்பணியாளர்கள் ஆய்வு செய்யும் புல எண்கள் வாரியாக கணக்கெடுப்பு பட்டியல் தயார் செய்யும் பணியினை உரிய பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்த்து ஆய்வு மேற்கொண்டார்.பயிர் பாதிக்கப்பட்ட பரப்பினை மாவட்ட கலெக்டர் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு, பாதிக்கப்பட்ட பரப்பினை விடுதலின்றி முறையாக கணக்கெடுக்க அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தி.சொக்கலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), மீனாட்சி சுந்தரம் வேளாண்மை உதவி இயக்குநர் திருவையாறு, கண்ணன் வட்டாட்சியர் திருவையாறு மற்றும் வருவாய்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்