முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே புளியங்குளத்தில் அம்மா திட்ட முகாம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை.பிப்- மதுரை தெற்கு வட்டம், புளியங்குளத்தில் அம்மா திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது.
 இம்முகாமில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:-
 “அம்மா” திட்டத்தின்படி வாரத்தில் ஒருநாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த்துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஆகியவற்றை அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்களில் வாழும் கடைகோடி மக்களுக்கும் அதிகமான அரசு சேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் “அம்மா” திட்ட முகாமானது வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
 இந்த அம்மா திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் என 10 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை 4 நபர்களுக்கும், சாதி சான்றிதழ் 3 நபர்களுக்கும் என மொத்தம் 17 நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சி.இந்திரவள்ளி, மதுரை தெற்கு வட்டாட்சியர் முருகையன், வட்டாட்சியர்கள் கோபிநாத் (சமூக பாதுகாப்பு திட்டம்), சதாசிவம்(குடிமைப்பொருள் வழங்கல்) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்