முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்டத்தின் மூலம் மகளிர் கூட்டமைப்புகளுக்கு கடனுதவி

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      நீலகிரி
Image Unavailable

தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்டத்தின் மூலம் மகளிர் கூட்டமைப்புகளுக்கு கடனுதவிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

                               வறுமை ஒழிப்பு திட்டம்

தமிழக அரசு ஏழை மக்களின் வறுமையை ஒழுக்கும் நோக்கத்தில் பல திட்டங்களை அறிமுககப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் மக்கள் பங்கேற்புடன் அமைக்கப்பட்ட திட்டம் தமிழ்நாடு மாநில வாழ்வாதார திட்டம். இத்திட்டத்தின் கீழ் அனைத்து துறை திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்யும் சிறப்பு ஒருங்கிணைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளின் வறுமை ஒழிப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து நிதி மற்றும் சேவைகளையும், அதன் பயன்களையும் தகுதியுள்ள ஏழை மக்களுக்கு வழங்கி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட செய்வதே சிறப்பு ஒருங்கிணைப்புத் திட்டத்தின் நோக்கமாகும்.

                             கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

ஏற்கனவே கண்டறியப்பட்ட இலக்கு பட்டியலில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பிற துறைகளுடன் இணைந்து சிறப்பு ஒருங்கிணைப்பு திட்டம் செயல்படுத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிறப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் அனைத்து துறை தலைமை அலுவலர்கள், ஊட்டி வட்டாரத்தின் அனைத்து தொகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்களுக்கு ஊட்டி வட்டாரத்தின் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள இலக்கு மக்கள் குடும்பங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்திட அனைத்து துறை திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விளக்கும் பொருட்டு ஒரு நாள் கருத்தரங்கு ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

                          நிதியுதவி

இக்கருத்தரங்கில் ஊட்டி வட்டாரத்தின் 13 ஊராட்சிகளில் கண்டறியப்பட்ட சுகாதார நடவடிக்கைகளுக்கு சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கிட 21 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு முதல் கட்டமாக 50 சதவீத சுழல்நிதியாக ரூ.8,70,000 நிதிக்கான காசோலையாகவும் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்திட சுகாதாரம் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கிட 13 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 50 சதவீத சுழல்நிதியாக ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் காசோலோயை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கி கூறுகையில், ஊட்டி வட்டாரத்தில் உள்ள இலக்கு மக்கள் குடும்பங்களின் மேம்பாட்டிற்காகவும், கிராமப்புறங்களில் காணப்படும் வறுமையை ஒழிப்பதற்காகவும் அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்றார்.

கருத்தரங்கில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் ரேணுகா தேவி விளக்க உரையாற்றினார். இக்கருத்தரங்கில் கோட்டாட்சியர் கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago