முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப் 6 மற்றும் 7 தேதிகளில் ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி சென்னை வருகை

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      சென்னை

இந்த இரு நாட்கள் வருகையின்போது, அம்மாவின் ஆசிர்வாதம் மற்றும் அன்பின் செய்தியோடு சேர்த்து தனிப்பட்ட தரிசனம், தியானம், பஜனை மற்றும் சத்சங்கம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன  உலகப்புகழ்பெற்ற ஆன்மிக தலைவரும், மனிதகுலத்திற்கான சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி (அம்மா) பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் சென்னைக்கு வருகை தந்து பல நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.சென்னையில், வரவிருக்கும் இந்த இரு நாட்களிலும், சென்னையின் விருகம்பாக்கத்தில், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அவரது ஆசிரமத்தில் அம்மா தங்கியிருப்பார். காலை 10:30 மணியிலிருந்து ஆன்மிக பேருரைகளை (சத்சங்கம்) அவர் வழங்குவார். அத்துடன், பஜனைகளை பாடுவதிலும், தியானம் செய்வதிலும் பக்தர்களை அவர் வழிநடத்துவார். அத்துடன் மனசா பூஜையையும் அவர் மேற்கொள்வார்.தாய்க்கே உரிய அன்பான அரவணைப்பு வடிவத்தில் வருகை தரும் ஒவ்வொருவருக்கும் அவரது புகழ்பெற்ற தரிசனத்தையும் அம்மா வழங்குவார். அம்மாவின் வழிகாட்டுதலின்கீழ், பக்தர்கள் அவர்களது சொந்த சனி பூஜையை செய்வதற்கான வாய்ப்புகளும் இங்கு கிடைக்கும். தேதிகள்:  பிப்  6 மற்றும் 7  நேரம்: காலை 10:30 மணிமுதல் இடம்: மாதா அமிர்தானந்தமயி மடம், 132, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம், அவிச்சி பள்ளி அருகே, சென்னை,   அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இலவசம். பொது மக்கள் தாராளமாக பங்கேற்கலாம்.பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரு தவணைகளாக நடத்தப்படும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி (அம்மா), மதுரை, சென்னை, மங்களுர், மைசூர், பெங்களுரு, ஹைதராபாத், புனே மற்றும் மும்பை மற்றும் கேரளா மாநிலத்திற்குள் பல்வேறு இடங்கள் உட்பட 17 நகரங்களுக்கு விஜயம் செய்து பக்தர்களுக்கு தனது ஆசிர்வாத மழையை பொழியவிருக்கிறார். அத்துடன், அன்பு மற்றும் சமாதானம் என்ற அற்புதமான செய்தியை மக்களுக்கு பரப்பும் பணியையும் மேற்கொள்வார். அம்மாவின் பாரத யாத்திரை என்ற இது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும். இதே காலஅளவில் உலகளவிலான பயணங்களையும் அம்மா மேற்கொண்டு, கலாச்சாரங்கள், மொழிகள், தேசிய இனங்கள் மற்றும் சமயங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களோடும் ஆழமான உறவுபிணைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்