முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வல்லத்துறை மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் எம்.எல்.ஏ.பாண்டியன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      கடலூர்
Image Unavailable

சிதம்பரம்.

 

சிதம்பரம் தொகுதி வல்லம்படுகை அடுத்த வல்லத்துறை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாட பொருட்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை வழங்கிடுமாறு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோரிக்கை மனு அளித்தார். அதன் அடிப்படையில் தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 இலட்சம் மதிப்பில் பெஞ்ச் டெஸ்க் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றினை வழங்கிட நிதி ஒதுக்கினார். அதன் அடிப்படையில் புதிதாக வரபெற்ற பெஞ்ச், டெஸ்க் மர்றும் தளவாட பொருட்கள் மற்றும் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைப்பெற்றது.

 

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான பெஞ்ச், டெஸ்க் போன்றவற்றை பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜனிடம் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினையும் இயக்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், ஒன்றிய பேரவை செயலாளர் ஜெயமணி, துணை செயலாளர் பாபு, ஒன்றிய அவைத்தலைவர்கள் சுந்திரமூர்த்தி, கோவி.ராசாங்கம், முன்னாள் ஒன்றிய பொருளாளர்கள் சுந்திரமூர்த்தி, முத்துக்குமரன், ஊராட்சி செயலாளர் கதிர்வேல், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அறிவுச்செல்வி, கூட்டுறவு வங்கி தலைவர் அண்னாதுரை, வட்டார கூட்டுறவு வங்கி தலைவர் தியாகராஜன், கிளை செயலாளர்கள் சுப்பிரமணியன், குமாரசாமி, துரை, பழனி, சின்னையன், கனேஷ் மகேந்திரன், முத்து மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

பள்ளிக்கு தேவையான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தந்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்களுக்கு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருப்பாளர்கள் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். பள்ளியின் தமிழ் ஆசிரியை அன்பு நன்றி கூறினார்.

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்