முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.17 நிர்ணயம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      நீலகிரி

பச்சைத் தேயிலைக்கு இம்மாத குறைந்த பட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.17 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேயிலை வாரிய உதவி இயக்குநர் பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                              தேயிலை வாரியம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளில்(பாட்லீப்) விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு ஒரு கிலோவிற்கு 17 ரூபாய் என பிப்ரவரி மாதம் முழுவதும் குறைந்த பட்ச விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேயிலை வாரியம் நிர்ணயித்த இந்த விலை, தொழிற்சாலைகளில் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உள்ளனர். எனவே தொழிற்சாலைகளில் நிர்ணய விலையை விட குறைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் பட்சத்தில் தேயிலை வாரியத்திற்கு அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை விவசாயிகள் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago