முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      சேலம்

சேலத்தில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, ஸ்ரீ வில்லிபுத்தூர் திருக்கோவில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையை ஸ்ரீ அழகிரி நாதருக்கு சாத்துபடி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து  தரிசனம் செய்தனர்சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் கோட்டை அருள் மிகு அழகரி நாதர் திருக்கோவில், இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு சார்பில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் மற்றும் பஞ்ச கருட சேவை வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.  அதே போல இந்த ஆண்டும் முப்பத்தி ஏழாம் ஆண்டு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் மற்றும் பஞ்ச கருட சேவை வைபவம் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பஞ்ச கருட சேவை வைபவம் நடைபெற்றது, ஐந்து கோவில்களிலும் உள்ள உற்சவ மூர்த்தியான பெருமாள்  கருட வாகனத்தில் ஒரே இடத்தில தரிசனம் செய்யும் விதமாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த வைபவத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ ஆண்டாள் திருகல்யாண வைபவம் இன்று நடைபெற்றது முன்னதாக உற்சவ மூர்த்தியான அழகிரி நாத பெருமாளுக்கும் ஆண்டாள் தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான வாசனை மலர்களால் மாலையாக தொடுக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, திருமண மேடைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் வேதங்கள் முழங்க மஹா ஹோமம் நடைபெற்றது, இதன் தொடரச்சியாக பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் கங்கன கயிறு கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திருமண ஆடை அணியப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யம் கான்பிக்கப்ட்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது, பின்னர் மங்கள வாத்தியம் முழங்க ஸ்ரீ ஆண்டாளை பட்டாச்சாரியார் நடனம் ஆடிய படி அழகிரி நாதர் ஸ்ரீ ஆண்டாள் தம்பதி சமேதராய் அமரதப்பட்டு நங்கவல்லி எனும் நலுங்கு பூஜை நடைபெற்றது இதனை தொடர்ந்து ;ஸ்ரீ வல்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையை ஸ்ரீ அழகிரி நாதருக்கு சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்த கோவிந்த என பெருமாளை அழைத்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மேல தாளம் முழங்க ஸ்ரீ அழகிரி நாதருக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் மகாதீபாராதனை தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த வைபவத்தை காண சேலம் மாநகர பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டினை ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்