மேலகரம் குறிஞ்சி வாசகர் பேரவைப் போட்டியில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி வெற்றி

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
bharath

தென்காசி,

 

மேலகரம், குறிஞ்சி வாசகர் பேரவையின் சார்பாகத் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. அத்தனித்திறன் போட்டிகளில் இலஞ்சி, பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி, குற்றாலம் ஹில்டன் மெடரிக்பள்ளி, தென்காசி இசக்கி வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ பள்ளி, தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிக்பள்ளி, பராசக்தி வித்யாலயா பள்ளி, ஏ.ஜி.மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டன. அதைத் தொடர்ந்து நiபெற்ற போட்டிகளில் பேச்சுப் போட்டியிலும், திறன்காண் போட்டியில் எல்.கே.ஜி மாணவி நித்திகா முதல் பரிசும், ஒவியப் போட்டியில் யு.கே.ஜி மாணவன் ஸ்ரீராம் முதல் பரிசும், மாணவன் லெஷ்மிவேல் இரண்டாம் பரிசும், பேச்சுப் போட்டியில் முதலாம் வகுப்பு மாணவன் தேவேஷ் காளிதாசன், மாணவி காளி பிரியா ஆகிய இருவரும் முதல் பரிசும், திறன்காண் போட்டியில் முதலாம் வகுப்பு மாணவி சிவானி, மாணவி காளி பிரியா ஆகியோர் முதல் பரிசும், பேச்சுப் போட்டியில் இரண்டாம் வகுப்பு மாணவி அபிநயா முதல் பரிசும், திறன்காண் போட்டியில் இரண்டாம் வகுப்பு இசக்கி கிஷோர் மற்றும் மாணவி ஷைனி பிரித்தி முதல் பரிசும் பெற்றுச் சாதனை படைத்தனர். இவ்வாறு குறிஞ்சி வாசகர் பேரவைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளைப் பள்ளித் தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வர் உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: