முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லிபாளையம் நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம், வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமினை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.02.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்,  தலைமையேற்று பள்ளிக் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,   1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகின்றது.  அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்  இக்குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிப்பதற்கும் உதவுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,10,000 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும்; பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால்  குழந்தைகள்  ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். வைட்டமின்-யு மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்;. குறிப்பாக இரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும். மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவர்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம்இந்த அல்பென்டசோல் குடற்புழுநீக்க மாத்திரை மற்றும் மருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை 1 முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் குழந்தைகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அல்பென்டசோல் குடற்புழுநீக்க மாத்திரை மற்றும் மருந்துகளை உட்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம்   பேசினார். இந்நிகழ்ச்சியில் எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.தோ.இராஜேந்திரன்  வரவேற்புரையாற்றினார். நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.கோ.ரஷே;குமார்  திட்டவிளக்கவுரையாற்றினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் மலர்விழி உட்பட மருத்தவர்கள், செவிலியர்கள்,  பள்ளி தலைமையாசிரியர்;, ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள், பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் பொதுசுகாதாரத்துறையின் புள்ளியியல் அலுவலர் நக்கீரன்  நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்