செங்கோட்டை குண்டாறு முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Shencottah kumbabisaga Photo

 

தென்காசி

செங்கோட்டை குண்டாற்றுக் கரையில் வீற்றிருக்கும் விநாயகர் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நெல்லை மாவட்டம் செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயில் உள்ளது.தற்போது இந்த கோயிலில் இதில் புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியும், கோபுரம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின.இந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை 6 மணிக்கு வ்நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது.இதனை தொடர்ந்து, காலை 9 மணிக்கு அக்கசாலை விநாயகருக்கும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் பரிவாரி மூர்த்திகளுக்கும்புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. சங்கரசுப்பிரமணிய பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரக் கலசங்கள் மீது புனித நீரை ஊற்றினர். பின்னர் அந்த புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர்.இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: