குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திடுக -நெல்லை மாநகராட்சி வேண்டுகோள்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

நெல்லை

குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு  நெல்லை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-நெல்லை மாநகரப் பகுதியில் குடிநீர் விநியோகம் தாமிரவருணி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 12 குடிநீர் தலைமை நீரேற்று நிலையங்கள் மூலமாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இந்த நீரேற்று நிலையங்களில் இருந்து 46 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் மாநகராட்சிப் பகுதிக்கு தேவையான குடிநீர்பம்பிங் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இப்போது பாளையங்கோட்டை மண்டலத்துக்கான மணப்படைவீடு பழைய மற்றும் புதிய நீரேற்று நிலையங்கள் மற்றும் கே.டி.சி.நகர் தலைமை நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி மூலம் குடிநீர் பராமரிப்புப் பணி திங்கள்கிழமை (பிப். 13) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் தலைமை நீரேற்று நிலையங்களில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படும் வார்டு எண் 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 24, 25 ஆகிய வார்டுகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.இதேபோல சரோஜினி பூங்கா நீரேற்று நிலையத்தில் இம் மாதம் 16 ஆம் தேதி பராமரிப்புப் பணி உள்ளதால் அன்றைய தினம் அங்கிருந்து குடிநீர் விநியோகம் பெறும் 25 ஆவது வார்டின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. மேலப்பாளையம் மண்டலத்துக்கான கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் இம் மாதம் 15 ஆம் தேதி பராமரிப்புப் பணி நடைபெறுவதால் இந்த நாளில் வார்டுகள் 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.தச்சநல்லூர் மண்டலத்துக்கான குறுக்குத்துறை தலைமை நீரேற்று நிலையத்தில் இம் மாதம் 14 ஆம் தேதி பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அங்கிருந்து குடிநீர் விநியோகம் பெறும்  வார்டுகள் எண் 45, 6, 7 மற்றும் 39 பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது

இதை ஷேர் செய்திடுங்கள்: