அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      கடலூர்
DSC 0038

சிதம்பரம்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வேளாண்புலத்தில் மரபியல் மற்றும் பயிர் இனவிருத்தியல் துறையில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு ”பயிர் இனப்பெருக்க துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானிய குழு சிறப்பு நிதி உதவியுடன் பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்கியது.  வேளாண்புல முதல்வர்  மு. இரவிச்சந்திரன் தலைமையேற்று, வறட்சி மற்றும் பல்வேறு சீதோஷணநிலைகளை தாங்கி உயர்விளைச்சல் தரும் புதிய ரகங்களின் தேவை குறித்து உரையாற்றினார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கோ. கணேசமூர்த்தி தனது உரையில் தற்போதைய சூழலுக்கேற்ற பயிர் மேம்பாட்டு விதிமுறைகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார்.  மரபியல் மற்றும் இனவிருத்தியியல் துறைத்தலைவர்  S. முருகன், யு.ஜி.சி சிறப்பு நிதி ஒருங்கிணைப்பாளர்  M. பிரகாஷ், தேசிய கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்  V. அன்புசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இணை ஒருங்கிணைப்பாளர்  இரா.ஈஸ்வரன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: