முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும்: பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்களிடையே உரையாற்றும்போது பிரதமர் மோடி கூறினார்.

இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்கள் குழுவினர் நேற்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினர். அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

உலகத்தில் தீவிரவாதம் தலைதூக்குவதை எதிர்த்து உலகம் முழுவதும் ஒன்றாக எழுந்து குரல் கொடுக்க வேண்டும்.

அதிகரிக்க வேண்டும்:

இருநாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கிடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதோடுமட்டுமல்லாமல் இருநாட்டு பிரதிநிதிகள் குறிப்பாக பாராளுமன்ற எம்.பி.க்கள் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும்.  உலக அளவில் தீவிரவாதத்தை  இயற்கையாகவே இரு நாடுகளும் எதிர்த்து வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தாம் (மோடி) சென்றதையும் கடந்தாண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து பிரதமர், இந்தியாவுக்கு வந்ததையும் மோடி நினைவு கூர்ந்தார். இந்தாண்டை இரு நாடுகளின் கலாச்சார ஆண்டாக கொண்டாடப்படுவதை வரவேற்ற மோடி, விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்