ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை தினம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      கடலூர்
annamalai university

சிதம்பரம்,

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை தினம், பிப்ரவரி மாதம் 13-ஆம் நாளன்று பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல் மருத்துவ புல முதல்வர் பேராசிரியர் மருத்துவர் வி. கிருஷ்ணன் தலைமையில், கல்லூரியின் முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் அ.தங்கவேலு அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் இராம.சந்திரசேகரன், மொழியியல் புலமுதல்வர் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் வீ.திருவள்ளுவன் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். பேராசிரியர் மருத்துவர் அ.தங்கவேலு விழாவில் பங்கோற்றோரை வரவேற்றார். பேராசிரியர் மருத்துவர் விக்ரமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மருத்துவர் விக்ரமன் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் மருத்துவர் ஷ்ரிவட்ஸா மற்றும் மருத்துவர் யோகாநந்தா சிறப்பு விரிவுரை ஆற்றினர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக மோட்டார் பைக் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் காவலர் பாதுகாப்புடன் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: