குறிஞ்சிப்பாடி பள்ளி குழந்தைகளுக்கு ருபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடும் முகாம்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      புதுச்சேரி
kurinjippaadi rubella

குறிஞ்சிப்பாடி,

 

குறிஞ்சிப்பாடி எஸ். கே.வி.மேல் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு ருபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலா அவர்களின் மேற்பார்வையில் மருத்துவர் துளசிதாஸ் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ருபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டது. மேலும் முகாமில் பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.மற்றும் எஸ் கே வி மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் உதவி தலைமை ஆசிரியர் ராஜீலு ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: