துாத்துக்குடியில் டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வுகள் 1533 பேர் ஆப்சென்ட்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
                           1               1533

தூத்துக்குடி.

துாத்துக்குடியில் நடைபெற்று வரும் குரூப் 1 தேர்வை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் நேரில் பார்வையிட்டார்.துாத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மூலம் துணைஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதே நிலையை சார்ந்த பல நிலைகளில் காலியாகவுள்ள 85 பணியிடங்களை நிரப்புவதற்கு, எழுத்துத்தேர்வு நடைபெற்றது. துாத்துக்குடி பி.எம்.சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் உடனிருந்தார். இத்தேர்வுகளுக்காக மொத்தம் 4,226 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில்  நடைபெற்ற தேர்வில் 2,693 பேர் பங்கேற்றனர்.1,533 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 63 சதவித பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: