இலவச தாய்சேய் ஊர்தி: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
02

கன்னியாகுமரி.

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் இலவச தாய்சேய் ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து, துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

 

நமது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த தாய் மற்றும் சேய் ஆகிய இரண்டு நபர்களையும் பாதுகாப்பாக, அவர்களது வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்கின்ற முக்கியமான பணிகளை, இந்த இலவச தாய் சேய் ஊர்தி மூலம் மேற்கொள்ள படவுள்ளது. இதற்கென பிரத்தியோக வாகனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், நமது மாவட்டத்திற்கு, முதற்கட்டமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும், தேசிய நலக்குழுமம் ஜனனி சிசு சுரக்ஷா கார்யாக்ரம் திட்டத்தின் மூலம் படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வாகனங்கள் கிடைக்கப்பெற்று, இப்பணிகளை முழுமையாக செயல்படுத்தப்படும். அவ்வாகனங்களின் பணியாளர்களை அமர்த்துதல், பராமரிப்பு ஆகிய பணிகள் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். சிகிச்சை முடிந்து, வீடு திரும்பும் தாய்மார்கள் இலவச தொலைபேசி எண்ணான 102 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும், தாய்மார்கள் அரசு வழங்கிய இந்த சேவையினை முழுமையாக பெற்று, பயன்பெறுமாறும் கலெக்டர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. இரவீந்திரன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு. வசந்தி, உறைவிட மருத்துவர் மரு. மேரி விஜயா, உதவி உறைவிட மருத்துவர் மரு. ஆறுமுகம், மரு. ரியாஸ் அகம்மத், ஜெபர்சிங் (இந்திய செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: