முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பான மாணவ, மாணவியர்கள் நடத்திய விழிப்புணர்வு மற்றும் பிரச்சார பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, நேற்று (22.02.2017) தொடங்கி வைத்தார்.

 

கருவேல மரங்கள்

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில், சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் தீங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை அகற்றுவது தொடர்பாக, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மற்றும் பிராசரப் பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தொடங்கிவைத்தார்.

பேரணி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பாரதியார் சாலை, தலைமை தபால் நிலையம், கண்டோன்மெண்ட் வழியாக மாநகராட்சி மைய அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் தீமை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர்கள் ஏந்திச்சென்றனர்.

விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ரா.ரமேஷ் மாநகராட்சி செயற்பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர் செல்வம், உதவி ஆணையர்கள் தயாநிதி, பத்மாவதி, ரெங்கராஜன், பழசுப்பிரமணியன், ஈ.வெ.ரா.பெரியார் கல்லூரி, ஆக்ஸ்போர்டு கல்லூரி, பிஷப் கல்லூரி, ஜமால் முகம்மது கல்லூரி, புனித வளனார் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை பொறியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்