தி.மு.க.தான் எங்களுக்கு முக்கிய எதிரி: டி.டி.வி. தினகரன் பேட்டி

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      அரசியல்
TTV dinakaran press(N)

 சென்னை  - சட்டசபையில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தார் ஸ்டாலின். திமுகதான் எங்களுக்கு முக்கிய எதிரி என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று டிடிவி தினகரன் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''தி.மு.க.வினர் மக்கள் என்ற போர்வையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். பேரவையில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தார் ஸ்டாலின். தி.மு.க.தான் முக்கிய எதிரி. விதிகளுக்கு உட்பட்டுதான் சபாநாயகர் பேரவையை நடத்தினார்

அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள். நான் திடீரென அதிமுகவுக்கு வந்தவன் அல்ல. ஜெயலலிதா அப்போதே எனக்குப் பல பதவிகளை வழங்கினார்.  ஜெயலலிதா கூறியதால் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தேன்.

மக்களின் கோபம் என்பது பொய்
மக்களின் கோபம் என்பது பொய் பரப்புரை. கட்சியின் வங்கிக் கணக்குகளை பொருளாளர் சீனிவாசன் கவனித்து வருகிறார். கட்சி யாரை முடிவு செய்கிறதோ அவரே ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ஓபிஎஸ் செயல்பாடு அதிமுக என்ற எஃகு கோட்டையைப் பாதிக்காது. வழிதவறிச் சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வருவார்கள் என எனக்குத் தெரியும்'' என்று டிடிவி தினகரன் கூறினார

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: