முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையை முடக்க நினைத்த ஸ்டாலினின் கனவு தோல்வி : மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் அறிக்கை

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      சென்னை

சட்டசபையை முடக்க நினைத்த ஸ்டாலின் திட்டத்தை தோல்வியடைந்தார் என்று தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜனநாயம் பற்றி வாய்க்கிழிய பேசும் திமுகவினர் தமிழக சட்டமன்றத்தில் நடந்துக்கொண்ட விதத்தை எண்ணி இன்றைக்கு உலகமே வியப்படையவைத்தது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சட்டசபையில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார். எவையெவைக்கெல்லாம் பேசக்கூடாதோ, அதையெல்லாம் பேசி, புரட்சித்தலைவர் எம்ஜிஆரை அவமானப்படுத்தினார். ஓரே சபையில் இரண்டு சபாநாயகர்கள் வைத்து அதிலே ஒருத்தரை தனது சபாநாயகராக்கி கொண்டு சபையின் செயல்களை சீர்குலைத்தவர் கருணாநிதி. ஜெயலலிதா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்திற்கு வரும்போது, 1989ல் அவர் மீது தனது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என்ற பெயரில் ரவுடிகளை விட்டு புரட்சித்தலைவி மீது தாக்குதல் புரிய செய்த பேசக்கூடாத வார்த்தைகளெல்லாம் கருணாநிதியே எங்கள் அம்மாவுக்கு எதிராக பேசி மிகப்பெரிய களங்கத்தை கருணாநிதி அரங்கேற்றினார். கருணாநிதிக்கு தற்போது உடல்நிலை சரியில்லாததால், அவைக்கு வரமுடியவில்லை. இந்நிலையில் திமுகவின் செயல்தலைவராக செயல்படும் ஸ்டாலின் தனது தந்தையை விஞ்சுகிற விதத்தில் சட்டமன்றத்தில் தனது செயல்பாட்டை திமுகவிற்கு அவப்பெயரை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார். மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கட்சி எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு, மைக் உடைக்க செய்தும், மேஜைகளை தூக்கி வீசச்செய்தும், நாற்காலிகளை அடித்துநொறுக்கியும், சபாநாயகர் தனபால் முன்னிருந்த மைக்கை பிடுங்கி, அவரது வாயில் அழுத்தி வைத்து அவரை பேசக்கட்டாயப்படுத்தி மிரட்டியதும், அவரை சட்டையை பிடித்து கிழித்தும், அவர் மிகப்பெரிய விபத்தை சந்தித்து அவர் மாற்றுத்திறனாளியாக இருப்பதை அறிந்து அவரை கையை முறுக்கி இழுத்து போட்டதும், பெருமைமிக்க தமிழகத்திற்கு தனது செயலால் இழிவை செய்தவர் ஸ்டாலின்தான். இத்திட்டமிட்ட செயலால்தானே, அதனால் பிரச்சனை உருவாக்கி கலவரத்தை உண்டு பண்ணி, சட்டசபையை முடக்கலாம் என்று நினைத்தார். அவரது எண்ணப்படி வெற்றிப் பெறமுடியவில்லை. எங்கள் உறுப்பினர்கள் பொறுமை காத்தார்கள். உங்களது திட்டம் தோல்வியடைந்தது. அதனால்தான் சபைக்காவலர்கள் வந்து தூக்கும்போது நீங்கள் அடம்பிடித்தீர்கள். காவலர்கள் தூக்கி வரும்போது, எந்த கைகலப்பும் நடக்கவில்லை. உரிய மரியாதையோடு தூக்கி வந்தனர். நேற்று முன் தீனம் நடந்த தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதம் என்பது பொதுமக்களிடம் வெற்ரி பெற முடியவில்லை . தமிழக மக்கள் அதிமுக அரசை பாராட்டி வருகின்றார்கள். உங்களது முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது என்று வி.பி.கலைராஜன் அறிக்கையில் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்