முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழுப்புரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி கலெக்டர் இல.சுப்பிரமணியன் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக மறைந்த  முன்னாள் தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை கலெக்டர்இல.சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டனர். இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படங்கள் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், குறிப்பாக இப்புகைப்படக் கண்காட்சியில் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தது ஆகிய சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மற்றும் மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா  தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செயல்வடிவத்தில் கொண்டு வந்த திட்டங்களான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல், கிராம புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் மற்றும் உதவித் தொகை, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவித்தல், பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் குடும்ப அட்டையுள்ள அனைவருக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்குதல், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, அம்மா குடிநீர் ஆகியவை திறப்பு விழா உள்ளடக்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.நமது மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் மணிமண்டபம், கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி மையம் திறப்பு விழா, விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம், விக்கிரவாண்டி, சின்னசேலம் புதிய தாலுக்கா திறப்பு விழா உள்ளிட்ட புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற  பழனிச்சாமி அவர்களின் புகைப்படங்கள், அவர் தலைமையிலான அமைச்சரவை புகைப்படங்கள், முதலமைச்சர்  5 திட்டங்களை செயல்படுத்தி ஆணையிட்ட புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இப்புகைப்படக் கண்காட்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்ததால், வணிகர்கள், வியாபர மக்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளுர், வெளியூர் செல்லும் பயணிகள் என 4500க்கும் மேற்பட்டோர்கள் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.  பொதுமக்கள் தெரிவிக்கையில்,  தமிழக முதலமைச்சர்  ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவது இப்புகைப்படக் கண்காட்சி வாயிலாக எங்கள் கண் முன்னால் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என தெரிவித்தனர்.இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, விழுப்புரம் வட்டாட்சியர் பத்மா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நி.சிவகுரு, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்