எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்காசி,
இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் ‘நைஸ்’ கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழாக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பள்ளி முதன்மை முதல்வர் காந்திமதி மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உஷா ரமேஷ் முன்னிலை வகித்தார். குற்றாலம் ஸ்ரீபராசக்தி பெண்கள் தன்னாட்சிக் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியை முத்துலெட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். மாணவி அஞ்சு குழுவினர் இறைவணக்கப் பாடலைப் பாடினர். மாணவி சிநேக பிரியா தொகுப்புரை வழங்கினார். மாணவி ஷபா வரவேற்புரை வழங்கினார். ஆங்கில ஆசிரியை சுல்தானா நைஸ் கல்வி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். இருபால் ஆசிரியர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டிமன்றம், முகப்பாவனை நடிப்பு, கதை சொல்லல் ஆகிய பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கிடையே, சிவப்பு, மஞ்சள், பச்சையென்று பல்வேறு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. அதில் ஒட்டு மொத்த வெற்றி வாகையைச் சூடி, முதல் பரிசை ஹவுஸ் ஆப் வின்டர்ஸ் அணி பெற்றது. இரண்டாம் பரிசை சைனிங் ஸ்டார்ஸ் அணி பெற்றது. மூன்றாம் பரிசை ரெயஸிங் ராக்கர்;ஸ் அணி பெற்றது. இறுதியாக மாணவன் நஸிம் நன்றியுரை வழங்கினார். விழா நாட்டுப் பண்ணோடு இனிதே நிறைவேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |