முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் 2139 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மற்றும் ரூ. 1 கோடியே 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

நல்லம்பள்ளி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 2139 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் மற்றும் ரூ. 1 கோடியே 21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று (26.02.2017) வழங்கினார்.இந்நிகழ்ச்சிகளில் உணவு பொருள் வழங்கல் துறையின் சார்பில் தருமபுரி வட்டத்திற்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட 495 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட 496 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், காரிமங்கம் வட்டத்திற்குட்பட்ட 523 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 2139 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது :- தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் பதவியேற்றவுடன் முதற்கட்டமாக 8000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக 2000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நல்லம்பள்ளி, தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களுக்குட்பட்ட குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வேளாண் உபகரண பொருட்கள் (ரோட்டாவேட்டர்) அரசு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டை என்பது மிக அவசியமான ஒன்று. அதனால் அம்மாவின் அரசானது பொதுமக்கள் பயன்பெறுமஃ வகையில் தருமபுரி மாவட்டத்தில் விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மாவட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து சரியான முறையில் விண்ணப்பித்து பயனடைய முன் வர வேண்டும்.அதேபோல் அம்மாவின் அரசானது தாலிக்கு தங்கம் 4 கிராமாக இருந்ததை தற்போது 8 கிராம உயர்த்தி வழங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் படித்த ஏழை எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியாக 10 மற்றும் 12 ம் படித்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும், பட்டம், பட்டயம் படித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கி வருகிறது. அம்மா பரிசு பெட்டகம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 12 ஆயிரம் வழங்கி வந்ததை தற்போது ரூ. 6 ஆயிரம் உயர்த்தி ரூ. 18 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பெருமக்களின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தும், 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கியும், நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்டுகள் எனவும், விசைத்தறிக்கு கட்டணமில்லாமல் வழங்கிய மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கி வருகிறார்கள். அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி தந்துள்ளார்கள். வேலைக்கு செல்லும் மகளிருக்கு ஸ்கூட்டி வாங்குவதற்கு 20 சதவீதம் மானியம் அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டபடி தற்போது தமிழக அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இக்கணினி செயலியின் பயனாக அங்காடியில் பொருட்கள் இருப்பு விவரம், அங்காடி திறக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்களை குடும்ப அட்டைதாரர்கள் அறியவும் வாங்கிய பொருள்களின் விவரங்களை தமது கைப்பேசி குறுஞ்செய்தியின் மூலம் தெரிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இடைவிடாது இயங்கி வரும் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 என்ற எண்களுக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் அனைத்து அலுவலர்களுடைய தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் ஆகியவை செயலியில் உள்ளன. பொதுமக்கள் அவசர காலத்தில் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அவசர கால உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) மல்லிகா, பாலக்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர். அன்பழகன், மத்தியக்கூட்டுறவு வங்கி இயக்குநர் வேலுமணி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, ஜெர்த்தலாவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் வீரமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்