முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் நகரில் முறையான குடிநீர் விநியோகம்: அமைச்சர் ராஜலெட்சுமி ஆய்வு

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவில்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் உள்ள 10வது வார்டுக்கு உட்பட்ட புதுமனை தெரு பகுதியில் குடிநீர் முறையான அளவில் விநியோகம் செய்யப்படுகிறதா? என்று ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் இராஜலெட்சுமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு நேரில் சென்று வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா? என்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது தற்பொழுது கோடைகாலம் நெருங்கிவருவதால் பத்து நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வரும் குடிநீர், இனி வருங்காலத்தில் வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் தற்போது குடிநீர் பிரச்சனைகளுக்கு தமிழக முதல்வர் முன்னுரிமை கொடுத்து செயல்படுமாறு அறிவுரை கூறியுள்ளார். தற்போது நெல்லை மாவட்டத்தில் அணைகளில் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. இருந்தபோதிலும் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாவரையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். ஆய்வின்போது சங்கரன்கோவில் நகரசபை ஆணையாளர் இராஜேந்திரன், கூட்டுறவு விற்பனை நிலைய மாநில துணை தலைவர் கண்ணன், தொகுதி இணை இணை செயலாளர் வேலுச்சாமி, நேர்முக உதவியாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பாசறை செயலாளர் முருகன், அதிமுக நிர்வாகிகள் சௌந்தர், ராமதுரை, தேவராஜ், நகரசபை மேலாளர் இலட்சுமணன், பிட்டர் சிவராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

==============

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்