கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      கடலூர்
Feb 27-b

கடலூர்.

 

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர் நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 411 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற முர்நுடுழு ஐNனுஐயு ரூ ளுபுகுஐ மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டியில் பங்கேற்று பின்பு தேசிய போட்டிகளில் நமது மாநிலத்தின் சார்பாக கடலூர் மாவட்டத்திலிருந்து மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றனர். செல்வன் ஆர்.அனிஷ் பிராய்லன் ஹைதரபாத்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றான். செல்வி பி.மிருதுளா மைசூரில் நடைபெற்ற டென்னிஸ் விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். செல்வி ஆர்.ரக்ஷா டெல்லியில் நடைபெற்ற நீச்சல் விளையாட்டுப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். செல்வி ஆர்.பிரியதர்ஷினி நாசிக்கில் நடைபெற்ற பேட்மிட்டன் விளையாட்டுப்போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். செல்வன் பி.சஞ்சய் குண்டூரில் நடைபெற்ற கோ-கோ விளையாட்டுப்போட்டியிலும், செல்வன் ஜே.ராஜா நெல்லூரில் நடைபெற்ற கோ-கோ விளையாட்டுப்போட்டியிலும், செல்வன் கே.கமல்வேனு குஜராத்தில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் பங்குபெற்றனர். மேற்கண்ட மாணவ மாணவிகளை கலெக்டர் பதக்கங்களையும், கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து இனி வரும் காலங்களில் மேலும் பல தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், காவல் துணை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு) கணேசன், உதவி ஆணையர் (கலால்) ஆர்.முத்துகுமாரசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: