முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகள் 100பேருக்கு கறவை மாடுகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:

புதன்கிழமை, 1 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் நகரில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மானாவாரி பகுதி மேம்பாடு சார்பில் ரூ.27.5லட்சம் மானியத்தில் பயனாளிகள் 100பேருக்கு 100கறவை மாடுகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.

திருமங்கலம் நகர் உழவர்சந்தையில் தமிழக வேளாண்மை துறையின் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மானாவாரி பகுதி மேம்பாடு சார்பில் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.வேளாண்துறை இணை இயக்குனர் ஸ்ரீதர்,துணை இயக்குனர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண் அலுவலர் செல்வராஜ்,துணை வேளாண் அலுவலர் மார்கண்டன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.நூற்றுக்கணக்கான பயனாளிகள் பங்கேற்று பயனடைந்த இந்த விழாவில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மானாவாரி பகுதி மேம்பாடு சார்பில் ரூ.27.5லட்சம் மானியத்தில் பயனாளிகள் 100பேருக்கு 100கறவை மாடுகளையும்,கால்நடைகளின் தீவனத்திற்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சதீஸ்சண்முகம்,அவைதலைவர் ஜஹாங்கீர்,ஒன்றிய அவைதலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,இணை செயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் பாவடியான்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம்,பழனிச்சாமி,சிவஜோதி தர்மர்,முனியாண்டி,பிச்சைமணி,கட்சி நிர்வாகிகள் உரப்பனூர் சாமிநாதன்,பி.ஆர்.சி.கணேசன்,உதவி வேளாண் அலுவலர்கள் பால்பாண்டி,அன்னக்கொடி,ஜெயபாண்டியன்,சிவசாமி,ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்