நந்திமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கு 12 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
1

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், நந்திமங்கலம் கிராமத்தில் கால்நடைகளுக்கு 12 -வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி (01.03.2017) நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒசூர் சார் கலெக்டர் மரு.கே.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.வே.விஜயகுமாரன் அனைவரையும் வரவேற்றார்.பின்பு அமைச்சர் பேசியதாவது. அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு மாநிலம் முழுவதும் தேசிய கால் மற்றும் வாய் காணை நோய் (கோமாரி) தடுப்பூசி திட்டத்தின்கீழ் 2016-17 ம் ஆண்டில் 12வது சுற்றில் மாநிலம் முழவதும் உள்ள 93 லட்சத்து 83 ஆயிரத்து 197 பசுவினம் மற்றும் எருமையின கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 01.03.2017 முதல் 21.03.2017 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3,67,550 பசு மற்றும் எருமையினங்களுக்கு 01.03.2017 முதல் 21.03.2017 வரை தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி கால்நடை பராமரிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது.மாவட்டத்தில் உள்ள 73 கால்நடை மருந்தகங்கள் மூலம் கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். முகாம் நாடைபெறும் நாட்களில் தடுப்பூசி குழுவினரால்; அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு 01.03.2017 முதல் அந்தந்த கிராமங்களில் நடைபெறும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை கொண்டு வந்து கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ளுமாறு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பேசினார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் கோமாரி நோய் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும், நந்திமங்கல் கிராமத்திற்கு சாலை வசதி இன்னும் 15 நாட்களில் சீர் செய்து கொடுக்கப்படும், குடிநீர் வசதியும், ஆரம்ப பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் குடும்ப அட்டைகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிதிவுதவி வழங்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் செ.மணிமாறன், மருத்துவர்கள் தயாநிதி, சீதாலட்சுமி, சிகவாமி சுந்தரி, ஒசூர் வட்டாட்சியர் பூசன்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்; சு.மோகன் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குநர் ஆர்.நாகராஜ், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: