முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் 15ஆயிரத்து 934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வினை 15 ஆயிரத்து 934 பேர் எழுதுகின்றனர். இதன்படி தேர்வு மையங்களுக்கு கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையமான ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ச.நடராஜன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான அரசு பொதுத் தேர்வு இன்று தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 3ஆயிரத்து 120 மாணவர்கள்,  3ஆயிரத்து 343 மாணவியர்கள் என மொத்தம் 6ஆயிரத்து 463 நபர்களும், ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 4ஆயிரத்து 236 மாணவர்கள்,  5ஆயிரத்து 235 மாணவியர்கள் ஆக மொத்தம் 9ஆயிரத்து 471 நபர்களும் ஆக மொத்தம் 7ஆயிரத்து 356 மாணவர்கள், 8ஆயிரத்து 578 மாணவியர்கள் என மொத்தம் 15ஆயிரத்து 934 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவற்றில் தேர்வு எழுதும் 13 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பொதுத்தேர்வானது மாவட்டத்தில் மொத்தம் 45 தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதிடும் வகையில் தேர்வு நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வுகளில்; முறைகேடுகள் நடக்காமல் தடுத்திடும் வகையில் தேர்வு மையங்களை ஆய்வு செய்ய வருவாய் மாவட்ட அளவில் தேர்வு நடைபெறுகின்ற 45 தேர்வு மையங்களை 6 மண்டலமாக பிரித்து 6 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 20 மாணவர்களுக்கு ஒருவர் வீதம் அறைக் கண்காணிப்பாளரும், 10 தேர்வறைகளுக்கு ஒரு நிற்கும் படையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதுதவிர மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக்கண்காணிப்பாளர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆகியோரும் தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்து கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   எனவே 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை அமைதியான முறையில் நடத்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்