முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் தங்கதுரை எம்.எல்.ஏ பேச்சு.

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -   திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய நகர அண்ணா திமுக கழகம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பட்டிவீரன்பட்டி காமராஜர் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மோகன் தொகுதி செயலாளர் கனகதுரை, வத்தலக்குண்டு நகர செயலாளர் பீர்முகமது, மீனவரணி செயலாளர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டிவீரன்பட்டி நகர கழக செயலாளர் ராஜசேகரன் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டதில் சிறப்பு விருந்தினராக நிலக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.தங்கதுரை கலந்துகொண்டு பேசினார். அவர் கூறும்போது 1972யில் கருணாநிதியின் தீய சக்திகளை எதிர்த்து எம்.ஜி.ஆர் அண்ணா திமுக என்ற மாபெறும் இயக்கத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு துரோகம் இலைக்கப்பட்டது அதற்காக எம்.ஜி.ஆர் தயங்கவில்லை துனிச்சலோடு நின்று இந்த இயக்கத்தை வழிநடத்தி மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சி புரிந்தார்.

அவருக்கு பின்னால் உடைந்த அண்ணா திமுக மீண்டும் ஒன்றாக இனைத்த பெறுமை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே சாரும் இந்த இயக்கத்தில் ஒன்னறை கோடி மக்களை சேர்த்து வழிநடத்தி நான்கு முறை வெற்றி பெற்று ஓரு பொற்கால ஆட்சியை நடத்தி பொது மக்களுக்கு உலகம் போற்றுகின்ற வகையில் அற்புத திட்டங்களை செய்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 65 வாக்குறுதிகளில் பத்து திட்டங்களை பொது செயலாளர் சசிகலா வழியில் நிறைவேற்றயுள்ளோம் எத்தனை துரோகிகள் எழுந்து வந்தாலும் மக்கள் நல திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து செயல்படும் என கூறினார்.

இக்கூட்டத்தில் 169 பெண்களுக்கு சேலை வழங்கும் நலத்திட்டம் நடைபெற்றது. ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் துரைராஜ்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அழகுமலை, ஒன்றிய மகிரணி செயலாளர் புஷ்பம், பட்டிவீரன்பட்டி நகர செயலாளர் விசு. சேவுகம்பட்டி நகர செயலாளர் மாசானம், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அன்னக்களஞ்சியம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், சுதாகர், பிச்சால், முன்னாள் பேரூராட்சி தலைவர் வைகைதுரை, கணவாய்பட் அதிமுக லதாஜெயராமன், ஒன்றிய நகர தலைவர் டீகடை பிச்சை, மாவட்ட பிரதிநிதி குமரேசன், கிருபாகரன், நகர வங்கி தலைவர் ஜெயபிரகாஷ், இய்ககுனர் பாண்டிராதா, திலீப்குமார், காளீஸ்வரி, கவுன்சிலர்கள் செல்லதுரை, மணிப்பிள்ளை, மற்றும் அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்