முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னிந்தியாவில் முதன்முறையாக ஊட்டியில் ரூ.9 லட்சத்தில் ரப்பர் தடுப்பணை

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

தென்னிந்தியாவில் முதன்முறையாக ஊட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில்

புதிதாக கட்டப்பட்டுள்ள மீள்ம(ரப்பர்) தடுப்பணையை உதவி பொது இயக்குநர் டாக்டர் எஸ்.பாஸ்கர் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

                        மீள்ம தடுப்பணை

மாறிவரும் காலநிலையின் விளைவாக வெள்ளம், புயர், வறட்சி போன்ற தீவிர நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. பொதுவாக தடுப்பணைகள் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்காக நீர்ப்பிரி முகடுப் பகுதியில் நிறுவப்படும் மிக முக்கிய பொறியியல் கட்டமைப்பாகும்.

இந்தியாவில் வலுப்படுத்திய கான்க்ரீட், சிமென்ட் கான்கிரீட் மற்றும் மண் மற்றும் கற்களைக் கொண்டு நிரந்தர தடுப்பணைகளும், தாவரங்களை பயன்படுத்தி தற்காலிக தடுப்பணைகளும் என பல்வேறு விதமான தடுப்பணைகளை பயன்படுத்தி நீர்ப்பிரி முகடுப்பகுதியில் வழிந்தோடும் நீர் கட்டுப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது. தற்போது கட்டுமானப் பணிகளில் புதிய தொழில்நுட்பமான ரப்பர் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.

                                        புதிய வடிவமைப்பு

மீள்ம(ரப்பர்) தடுப்பணை என்பது நெகிழும் தன்மை கொண்ட நீரால் நிரப்பப்பட்ட மீன்மத்தினால் உருவாக்கப்பட்ட ஓடைகளில் கட்டக்கூடிய ஓர் நீர்சேகரிப்பு கட்டமைப்பாகும். மீள்ம கட்டமைப்பிலிருந்து நீர் வெளியேற்றப்படும் போது உயரம் குறைந்து வெள்ளநீரை வடிகட்டவும், வண்டல் மண் படிவங்களை வெளியேற்றவும் பயன்படுகிறது. நீர்நிரம்பும் போது மீள்ம(ரப்பர்) தடுப்பணைகளில் உயரம் உயர்ந்து நீர்சேகரிக்கப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மீள்ம தடுப்பணை தொழில்நுட்பமானது புவனேஸ்வரத்தில் உள்ள இந்திய நீர் மேலாண்மைநிறுவன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும். இவ்வகை தடுப்பணையானது தற்பொழுது ஓடிசா, வடகிழக்கு மாநிலங்கள், உத்தரகாண்ட் மற்றும் சில வடமாவட்டங்களில் செயல்விளக்கத்தில் உள்ளது. 

                      ரூ.9 லட்சம்

புவனேஸ்வரத்தில் உள்ள இந்திய நீர்மேலாண்மை நிறுவனமும், ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையமும் இணைந்து தென் இந்தியாவில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் சில்லாலா நீர்ப்பிரி முகடு பகுதியில் செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு மீள்ம தடுப்பணை நிறுவப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையை நிறுவுவதற்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை செலவாகும். இதனை விவசாயிகளே பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஊட்டி இந்திய மண் மற்றும் நீர்வளப்பாதுகாப்பு நிறுவனத் தலைவர் முனைவர் கோலா, சீனியர் விஞ்ஞானிகள் டாக்டர் மணிவண்ணன், டாக்டர் கண்ணன், டாக்டர் ராஜன், டாக்டர் ராஜா, டாக்டர் கஸ்தூரி திலகம், டாக்டர் ரகுபதி, ஒப்பந்ததாரர் தங்கராஜ் மற்றும் ஆராய்ச்சி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago