முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்து நிறுவனம் சார்பாக இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி இருளர் காலனியில் விஷகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்பாக்கம் அடுத்த ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள வெஸ்ட் பார்மாசுட்டிகல் பேக்கேஜ் இந்தியா என்ற தொழிற்சாலை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

கும்மிடிப்பூண்டி வட்டத்தை சேர்ந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் 12 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் இப்பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு இப்பகுதி மக்கள் புதுகும்மிடிப்பூண்டி கிராம சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இந்த இருளர் இன மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள வெஸ்ட் பார்மாசுட்டிகல் பேக்கேஜ் இந்தியா என்ற தொழிற்சாலை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

விழாவில் மேற்கண்ட நிறுவனத்தின் நிதி மேலாளர் வள்ளி குமரன், பாதுகாப்பு மேலாளர் விஜயசாரதி, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி, கும்மிடிப்பூண்டி ஷேர் அறக்கட்டளை நிறுவனர் மேரி ஆக்சீலியா, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்துக் கொண்டு மர்ம காய்ச்சால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு அரிசி, பருப்பு, துணிகள், போர்வை, வீட்டு உபயோகப் பொருட்கள் என 20ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்