முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டத்தில் வரும் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான மேலாண்மை உத்திகளை கையாள்வது குறித்து செயற்பொறியாளர், குடிநீர் வடிகால் வாரியம், செயற்பொறியாளர், ஊரக வளர்ச்சித்துறை, உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து பொறியாளர்களுடன் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நேற்று (04.03.2017) நடைபெற்றது. இதில் கிராம அளவிலான வரைபடத்தை கொண்டு தற்பொழுது பயன்பட்டில் உள்ள நீர் ஆதாரங்கள் குறித்த விவரங்கள் விவாதிக்கப்பட்டதுடன் இவ்விவாதத்தில் கண்டறியப்பட்ட குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தேவைப்படும் பணிகளுக்கு கலெக்டர் கே.விவேகானந்தன், ஐபுகு மற்றும் ஒன்றிய பொது நிதியிலிருந்து முன்னுரிமை அளித்து குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பு மைய எண்கள். 1077இ 890 389 1077, 1800 425 7016, 1800 425 1071 மூலம் பெறப்படும் புகார்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் ஆர்.பிரேம்குமார், உதவி இயக்குநர் (தணிக்கை) பழனிசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமலாதேவி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago