நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      நீலகிரி

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துப் போனதின் காரணமாக கடும் வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால பயிர் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன்பெற்று வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்கள் குறுகிய கால பயிர்கடனை மத்திய கால கடன்களாக மாற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: