முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்திலுள்ள இளைஞர்கள், கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்வர வேண்டும் : கலெக்டர் கோவிந்தராஜ் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், வெள்ளியணை, வீரராக்கியம் ஆகிய ஏரிப்பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், நேற்று (05.03.2017) கருவேல்மரங்களை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேண்டுகோள்

 

 

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:சீமைக்கருவேல் மர விதைகள் எத்தகைய பூச்சிகளுக்கும் இரையாகாமல் 10 ஆண்டு காலத்திற்கு பின்னும் முளைக்கும் வீரியம் கொண்டவை. எத்தகைய வறண்ட நிலப்பரப்பிலும் 12 மீ உயரம் வரை வளரும் தன்மையுடையது. இம்மரத்தினுடைய வேர்கள் மழைநீரை பூமிக்குள் செல்லவிடாமல் தேங்க வைத்து வருகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி வேளாண்மைத்தொழிலுக்கு தீமை விளைவிக்கிறது. இதன் நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. இம்மரங்கள் அதிக அளவு கரியமிலவாயுவை வெளியேற்றுவதால் சுற்றுப்புறச்சூழல் அதிக விஷத்தன்மையுடையதாக மாறிப்போகிறது. இதனை விறகாக பயன்படுத்தும்போது ஏற்படும் புகை ஆஸ்துமா, மூச்சுத்திணறல் முதலான நோய்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஆபத்தை விளைவிக்கக்கூடிய சீமைக்கருவேல் மரங்களை அகற்றிட மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டு பொது இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்களது நிலப்பரப்பில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மூலம் அகற்றி விட்டு அதற்கான செலவுத்தொகையை இரண்டு மடங்காக நிலத்தின் உரிமையாளரிடமிருந்து வசூலிக்க மாண்பமை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

மேலும், உப்பிடமங்கலம் ஏரிப்பகுதியில் கருவேல் மரங்களை அகற்ற ஒன்றுகூடி முகநூல் வாயிலாக நண்பர்களை ஒருங்கிணைத்து கரூர் தமிழன் என்ற அமைப்பு வாயிலாக சேரன் கல்லூரி, விஎஸ்பி கல்லூரி, பிஜிபி கல்லூரி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்; ஆகியோர் தாமாகவே முன்வந்து கருவேல் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து சீமைக்கருவேல் மரங்களை அகற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் பொதுப்பணித்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் திருவேட்டைச்செல்லம், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர் துரைசாமி, ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்சாமி, உதவிப்பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்