தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த புதிய திட்டப்பணிகள்:முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      தர்மபுரி
4

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (07.03.2017) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.பின்னர் முதலமைச்சர் தெரிவித்ததாவது :- தருமபுரி மாவட்டத்திற்கு உள்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உயர்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத் துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, இதர கட்டடங்கள் என ரூ. 60 கோடியே 33 இலட்சம் மதிப்பிலான 113 பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தளவாய்அள்ளியில் வேளாண்மைத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள 500 மெட்ரிக் டன் கிடங்கு வசதியுடன் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் விதை சுத்திகரிப்பு மைய கட்டிடம், கால்நடை மருத்துவமனை ரூ. 42 இலட்சம் மதிப்பீட்டில் மையத்தினையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதி ரூ. 4 கோடியே 23 இலட்சம் மதிப்பீட்டிலும், சார்பதிவாளர் அலுவலகம் ரூ. 55 இலட்சம் மதிப்பீட்டிலும், காவல்துறை அலுவலர்களுக்கான 65 குடியிருப்புகள், 1 காவல் நிலையம் மற்றும் 1அலுவலக கட்டிடம் ரூ. 8 கோடியே 82 இலட்சம், உயர் கல்வித்துறையின் சார்பில் அரூர் பெரியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காரிமங்கலம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ. 14 கோடியே 50 இலட்சம் மதிப்பில், வேலை வாய்ப்புத்துறை ரூ. 1 கோடியே 65 இலட்சம் மதிப்பில் கடகத்தூர் வேலை வாய்ப்பு அலுவலக கட்டிடம், பள்ளிக்கல்வித்துறை ரூ. 19 கோடியே 19 இலட்சம் மதிப்பிலும் புதிய பள்ளி கட்டிடம் பென்னாகரம், பாலக்கோடு, அரூர் 3 பள்ளிகள், பாப்பிரெட்டிப்பட்டி அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.), ரூ. 28 இலட்சம் மதிப்பில் 12 பள்ளிகள் (ளுஅயசவ ஏசைவரயட ஊடயளள சுழழஅள), பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ. 3 கோடியே 24 இலட்சம் மதிப்பில் மேம்பால கட்டுமானப் பணிகள், மறு சீரமைப்புப் பணி ரூ. 1 கோடியே 34 இலட்சம் மதிப்பில் பொம்மிடி மற்றும் தொப்பையாறு ரோடு வரை மேம்பாலப்பணி, தருமபுரி நெடுஞ்சாலைத் துறையின் மூலம் உட்கோட்டம் பாலக்கோட்டில் நெடுஞ்சாலைத் துறை கட்டிட பணிகள் 1 ரூ. 25 இலட்சம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ. 5 கோடியே 3 இலட்சம் மதிப்பில் 3 பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம், 3 பாலம், அங்கன்வாடி கட்டிடம் 1, 2 கிராம பஞ்சாயத்து பணி அலுவலகம், கம்பியாளர் (றசைநஅயn) தொழிற்பயிற்சி நிலையம், தருமபுரி 1 பணி ரூ. 38 இலட்சம் மதிப்பில் ரூ. 20 இலட்சம் மதிப்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் 1, மேலும் புதியதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் நலத்திட்ட உதவிகள் தருமபுரி மாவட்டத்திற்கு ரூ. 60 கோடியே 33 இலட்சம் மதிப்பிலான 113 பணிகளை வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் விழாவில் தெரிவித்தார். இவ்விழாவில் தலைமை செயலக செயலர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் , மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை பி. தங்கமணி , சமூக நலத்துறை அமைச்சர் மரு. வி. சரோஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தித்துறை உயர் அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: